'பிரசவ வார்டில் துடித்துக்கொண்டிருந்த மனைவி'..'கண்ணீரை வரவழைத்த கணவரது செயல்'!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Siva Sankar | Sep 24, 2019 11:01 PM

அமெரிக்காவின் ஜார்ஜியாவைச் சேர்ந்த கணவர் கெண்டால் கேர்வர். இவரது மனைவி ஜாஸ்மின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தன் மனைவிக்காக செய்த காரியம் வீடியோவாக வலம் வந்ததோடு, காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

caring husbands act goes viral during his wife delivery

அந்த வீடியோவில், பிரசவத்துக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னதாக ஜாஸ்மின் வலியால் துடித்துக் கொண்டிருந்த வேளையில், தனது கைகளில் நிறைய பதாகைகளுடன் அங்கு வந்த கெண்டால் கேர்வர், மூச்சுவிடு என்று எழுதப்பட்ட பதாகையினை தனது மனைவியின் கண் முன் காட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து அவர்களின் அத்தனை ஆண்டுகால காதல் வாழ்க்கையில் சந்தித்த இனிமையான தருணங்கள் எல்லாவற்றையும் எழுத்தாகவே ஒவ்வொரு அட்டையாக காண்பிக்கிறார். இறுதியில் ஐ லவ் யூவில் முடிக்கிறார். இத்தகைய வீடியோவை பார்த்ததும் பலர் கண்ணீர் விட்டதாகவே, கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

இணையத்தில் தெறி ஹிட் அடித்த இந்த வீடியோவுக்கு எதிராகவும் சில பெண்கள் கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். அதாவது அத்தனை வலியில் நானெல்லாம் இப்படி நீங்கள் எழுதி காட்டுவதை வாசித்துக்கொண்டிருக்க மாட்டேன் என்றும் சில பெண்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

எது எப்படியோ கேர் மிகுந்த கெண்டால் கேர்வரின் மனைவி ஜாஸ்மினுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Tags : #HUSBANDANDWIFE #PREGNANT #DELIVERY #VIRAL #HEARTMELTING