திடீரென பாலத்தில் இருந்த குதித்த இளைஞர்..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 27, 2019 01:57 PM

மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Tirupur man jumps from flyover video goes viral

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது நேற்று நபர் ஒருவர் ஏறி குதிப்பதுபோல் நின்றுள்ளார். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நின்றிருந்த அவர் திடீரென கீழே குதித்தார். அப்போது பாலத்துக்கு கீழே சென்றுகொண்டிருந்த பேருந்தில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதனை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் பாலத்தில் இருந்து குதித்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பாலத்தில் இருந்து குதித்ததற்கான காரணம் ஏதும் தெரியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்வத்தை நேரில் பார்த்தவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #TIRUPUR #DRUNKENMAN #JUMPS #FLYOVER #VIRALVIDEO