‘அக்காவின் கணவரால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம்’... 'உறைந்துபோய் நின்ற குடும்பம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 21, 2019 11:45 PM

சேலம் அருகே மனைவியின், தங்கையை கடத்திச்சென்று, கணவரே பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 year old girl 5 months pregnant by her uncle in salem

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியை அடுத்த குருவாளியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி, கலா தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, பிரியா, சீதா என இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகள் பிரியா அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். அப்போது தாராபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணி என்ற இளைஞர், ஆசை வார்த்தை கூறி, காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் மணி. இதற்கிடையில் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வரும், தனது மனைவியின் தங்கையான சீதாவை, ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்து 5 மாத கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தெரியவந்த சீதாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தனது மருமகன் மீது போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், தலைமறைவாக இருந்த மணியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags : #SALEM #SEXUALHARASSMENT #UNCLE #TAMILNADU #RAPE #PREGNANT #SISTER