‘இது நடக்க சான்ஸே இல்ல’... ‘அதனால, மனைவியின் வித்தியாசமான’... 'கோரிக்கையால் அதிர்ந்த கணவர்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Aug 26, 2019 05:39 PM

வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் தினமும் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர், தனது கணவரை விவாகரத்து செய்ய முன்வந்ததற்கான காரணம் பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

UAE woman seeks divorce over husband’s ‘extreme love’

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து வேண்டும் என கூறி ஷரியா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் கூறுகையில்,  ‘எங்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என்னுடைய கணவர் இதுவரை ஒருநாள் கூட என்னிடம் சண்டை போடவில்லை. எப்போதும் என்னிடம் அன்பையும், காதலையும் அளவுக்கதிகமாக காட்டுகிறார். இது எனக்கு நரகமாக இருக்கிறது. என்னை கொடுஞ்சொல்லால் திட்டுவதும் இல்லை. என் கணவரின் அன்பும், கனிவான பேச்சும் ஒவ்வொரு நாளும் கூடுகிறது. 

சமையல் கூட எனக்காக பிடித்தாக செய்து வைக்கிறார். நான் வீட்டை சுத்தம் செய்தால்கூட என்னைக் கேட்காமல் எனக்கு உதவுகிறார். ஒருமுறைக்கூட என்னிடம் வாதம் செய்தது இல்லை. அவரின் உடல் பருமன் பற்றி கூறியபோது, எனக்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்தார். மேலும் எங்கு சென்றுவிட்டு வந்தாலும் ஏராளமான பரிசுகளை வாங்கிக் கொடுத்துவிடுகிறார். ஒருநாளாவது என்னிடம் சண்டைபோடுவார் என எதிர்பார்க்கிறேன். ஆனால், சண்டைக்கு வழியே இல்லை.

எனக்கு உண்மையான விவாதம், சண்டை தேவை. இதுபோன்ற அளவுக்கு அதிகமான அன்பும், எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவரும் பிடிக்கவில்லை. எனவே அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும்’ என கூறியுள்ளார். இந்தவழக்கில் அந்தப் பெண்ணின் கணவர் கூறுகையில், ‘என் மனைவியிடம் இருந்து என்னை பிரித்துவிடாதீர்கள். நான் எப்போதும் சிறந்த, கனிவான கணவராக இருக்கவே நினைக்கிறேன்’ என கூறியுள்ளார். கணவன், மனைவி இருவரும் அமர்ந்து மீண்டும் மனம்விட்டு பேசுவிட்டு கூறுங்கள் என தெரிவித்து நீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்துவிட்டது.

Tags : #DIVORCE #UAE #WOMEN #HUSBANDWIFE