‘3 சகோதரிகளின் ஆடைகளை களைந்து’.. ‘காவலர்கள் செய்த காரியம்’.. ‘கர்ப்பிணிப் பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 18, 2019 02:02 PM

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று 3 சகோதரிகளின் ஆடைகளைக் களைந்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரில் 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Assam 2 cops booked for torture of pregnant woman her sisters

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களின் சகோதரர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணைக் கடத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணைக்காக 3 சகோதரிகளையும் அவர்களில் மூத்த பெண்ணின் கணவரையும் கடந்த 9ஆம் தேதி புர்ஹா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணையின்போது காவலர்கள் 3 சகோதரிகள் உட்பட 4 பேரின் ஆடைகளையும் களைந்து அவர்களை கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதில் பாதிக்கப்பட்ட 3 பேரில் கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண்ணிற்கு கரு கலைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி முனையில் காவலர்கள் தங்களை சித்திரவதை செய்ததாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஒரு பெண் காவலர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : #ASSAM #POLICE #STATION #WOMEN #SISTERS #STRIPPED #TORTURED #BROTHER #LOVE #AFFAIR #PREGNANT