‘திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்’.. ‘கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த பரிதாபம்’.. ‘குழந்தையை போராடிக் காப்பாற்றிய மருத்துவர்கள்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Sep 18, 2019 06:27 PM

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரீகிளாம்சியாவால் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Pregnant bride dies from stroke mins before marriage baby saved

பிரேசிலைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா கியூடெஸ் என்ற கர்ப்பிணிப் பெண் தனது காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென பின் கழுத்து வலி ஏற்பட்டதையடுத்து பக்கவாதம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் தேவாலயம் சென்றதும் அங்கு காத்திருந்த அவருடைய காதலர் ஃபிலேவியோ கான்கல்வெஸ் அவருக்கு முதலுதவி அளித்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு மூளையில் உள் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தை அவசர அவரசமாக அறுவை சிகிச்சை மூலமாக எடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் இறந்துவிட்ட நிலையில் 6 மாதத்திலேயே எடுக்கப்பட்டதால் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வரை மகிழ்ச்சியோடு இருந்த தனது காதலிக்கு சில நிமிடங்களில் நேர்ந்த அசம்பாவிதத்தை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என அவருடைய காதலர் வேதனை தெரிவித்துள்ளார்.

Tags : #BRAZIL #PREGNANT #GROOM #BRIDE #MARRIAGE #BABY #STROKE