உஷார்..! ஆபாச இணையதளத்தில் வெளியான டிக்டாக் வீடியோ’.. மிரண்டு போன பெண்கள்..! அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 22, 2019 07:08 PM

டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோ ஆபாச இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக 28 பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Women complained for their tik tok videos published in porn website

டிக்டாக் எனும் செயலியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இதில் சமூகத்தை கெடுக்கும் விதமாக பலர் ஆபாசமான வகையில் வீடியோ பதிவிடுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது. மேலும் அதிக லைக்குகள் வாங்குவதற்காக அரைகுறை ஆடையுடன் பலரும் வீடியோ பதிவிடுகின்றனர். இதனால் டிக்டாக் நிர்வாகம் வீடியோ பதிவேற்றுவதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பெண்களின் டிக்டாக் வீடியோ ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் ஆபாச இணையதளங்களில் உள்ள தங்களது வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். டிக்டாக்கில் பதிவேற்றிய வீடியோ ஆபாச இணையதளங்களில் வெளியான சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TIKTOK #PORNWEBSITES #WOMEN #TIKTOKVIDEO