‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Aug 30, 2019 06:17 PM

அமெரிக்க சிறையில் பிரசவ வலியில் துடித்த இளம்பெண்ணுக்கு உதவாமல் அனைவரும் வேடிக்கை பார்த்த கொடூரம் நடந்துள்ளது.

Denver lawsuit alleges woman had to give birth alone in jail cell

அமெரிக்காவின் கொலொரடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரைச் சேர்ந்த டியானா (26) என்ற பெண் கடந்த வருடம் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் டியானாவுக்கு ஒரு வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டபோது அவர்  8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். தற்போது தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள அவர் சிறையில் தான் அனுபவித்த கொடுமைகள் குறித்த சிசிடிவி பதிவுடன் சிறை அதிகாரிகள் மீது புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில் அவர், “கடந்த ஜூலை 31ஆம் தேதி 8 மாத கர்ப்பிணியாக இருந்த எனக்கு சிறையில் பிரசவ வலி ஏற்பட்டது. காலை முதலே துடித்துக்கொண்டிருந்த எனக்கு அங்கிருந்த சிறை அதிகாரிகள், செவிலியர் என யாருமே உதவவில்லை. 6 மணி நேரமாக வலியில் துடித்தபோதும் அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். பின்னர் எனக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது எனக் கதறியபோதே செவிலியர் வந்து பார்த்தார். அவரும் ஜன்னல் வழியாக சில துணிகளை மட்டும் பிரசவத்துக்காக கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் நானே அந்தத் துணிகளைக் கொண்டு பிரசவத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டேன்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு எனக்கு குழந்தை பிறந்ததும், செவிலியர் வந்து என்னிடமிருந்து குழந்தையை மட்டும் எடுத்துச் சென்றுவிட்டார். என்னுடைய நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது. சிறை நிர்வாகத்தின்மீதும், வேடிக்கை பார்த்த செவிலியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இதுதொடர்பான வழக்கில் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : #US #JAIL #PREGNANT #WOMAN #SHOCKING #VIDEO #POLICE #NURSE