‘கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள்’.. ‘அதிர்ந்துபோய் நின்ற பெற்றோர்’.. ‘12 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 26, 2019 01:40 PM

கேரளாவில் 12 வயது சிறுமி ஒருவர் தனது வகுப்பு ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala 12 year old girl raped impregnated by school teacher

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமி தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட அவருடைய பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங்கிற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் விசாரித்ததில் சிறுமியின் வகுப்பு ஆசிரியர் கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததோடு, பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாகியுள்ள ஆசிரியரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #KERALA #MALAPPURAM #SCHOOL #MINOR #GIRL #RAPE #TEACHER #PREGNANT