'அப்போ உள்ள இருந்தது கிட்னி கல் இல்லயா?'.. இந்த அதிர்ச்சியிலும் 'ட்ரிபிள்' சந்தோஷம்.. பெண்ணுக்கு நடந்த விநோதம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 20, 2019 05:06 PM

அமெரிக்காவில், குழந்தை பேறுக்காக உண்டான வலியினை, பெண்ணொருவர் சிறுநீரகக் கல் என்று நினைத்துக்கொண்டிருந்த ஆச்சர்யம் நடந்துள்ளது.

pregnant woman thought that she had Kidney Stones goes viral

கடந்த 10-ஆம் தேதி, அமெரிக்காவின் டகோட்டா மாகாணத்தைச் சேர்ந்த டெனேட் கில்ட்ஸ்க்கு அடி வயிற்றில் வலி வந்ததை அடுத்து, அவரை அவரது கணவர் ஆஸ்டின் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அதுவரையில் டெனேட் கில்ட்ஸ், தனக்கு சில வாரங்களாக அடி வயிற்றில் இருந்த வலிக்கு சிறுநீரகக் கல்தான் காரணமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்துள்ளார்.

ஆனால், அங்கு கில்ட்ஸை பரிசோதித்த மருத்துவர்கள், கில்ட்ஸ்க்கு அப்படியெல்லாம் சிறுநீரகத்தில் கல் ஒன்றும் இல்லை என்றும் அவர் உண்மையில் கர்ப்பம் தரித்திருக்கிறார் என்றும், அவர் கர்ப்பமாகி, 34 வாரங்கள் ஆகியிருக்கன என்றும் கூறியிருக்கிறார். உடனே கில்ட்ஸுக்கு ஏற்பட்ட பிரசவ வலியை கில்ட்ஸால் உணர முடிந்தது.

இதில், ஆச்சரியம் என்னவென்றால், கர்ப்பமானதே தெரியாமல், வயிற்றுக்குள் இருந்தது சிறுநீரகக் கல் என்று நம்பிக்கொண்டிருந்த கில்ட்ஸ்க்கு, அந்த ஒரே பிரவசத்தில் 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை என, குழந்தைகள்  தலா 2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதுதான்.

Tags : #WOMAN #PREGNANT