மனவளர்ச்சி குன்றிய ‘15 வயது சிறுமி கர்ப்பமெனக் கூறிய டாக்டர்கள்’.. ‘அதிர்ந்துபோய் நின்ற தாய்’.. ‘விசாரணையில் வெளிவந்த உண்மை’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 04, 2019 08:52 PM

திருச்சியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 held in Trichy for raping 15 year old mentally ill girl

திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர் அவருடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவர்கள் தினமும் கூலி வேலைக்கு சென்றுவிடும் நிலையில் சிறுமி தனது தாத்தாவின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உடலில்  மாற்றம் ஏற்படுவதைக் கண்ட அவருடைய தாய் சிறுமியை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் டி.செல்வராஜ் (51),  முத்து (57), ராமராஜ் (45), பி.செல்வராஜ் (49) ஆகிய 4 பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரியவந்துள்ளது.  இதைத்தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ள போலீஸார் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Tags : #TRICHY #MENTALLYILL #TEENGIRL #PREGNANT #SHOCKING #RAPE