‘கண் இமைக்கும் நேரத்தில் காரும் லாரியும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 19, 2019 06:44 PM

கள்ளக்குறிச்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 dead in lorry car accident near kallakurichi

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமி (59) என்பவர் அவரது சம்பந்தியான முருகன் (50) என்பவருடன் இன்று அதிகாலை கோபிச்செட்டி பாளையத்திலிருந்து சென்னை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே லாரி வந்த கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ரங்கசாமி மற்றும் முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த கார் ஓட்டுநர் சாமிநாதன் மற்றும் லாரி ஓட்டுநர் சிவராமன் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KALLAKURICHI #CAR #LORRY #ACCIDENT #DEAD