‘வயிற்று வலினு போன சிறுமிக்கு’... ‘டாக்டர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ச்சியான பெற்றோர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 10, 2019 10:13 AM

விருதுநகர் அருகே 11-ம் வகுப்பு மாணவனால், 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10th standard student pregnant, 11th standard boy arrested

திருச்சுழி அருகே சித்தலகுண்டுவைச் சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு  படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் அடைக்கலம் என்பவர், அருகில் உள்ள தமிழ்பாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் படித்து வருகிறார். ஒரே கிராமத்தை சேர்ந்த அடைக்கலத்திற்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல், தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி கடுமையாக இருந்ததால், அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், மாணவி 6 மாத கர்பிணியாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்ததில் அவர் பதில் கூற மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் மாணவியின் பெற்றோர், திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் மாணவி 18 வயதிற்கு கீழ் இருந்த காரணத்தினால், புகார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர், மாணவியிடம் நடத்திய விசாரணையில், அதேப் பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்ற மாணவருடன் தனக்கு பழக்கம் இருந்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து அடைக்கலத்தை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், மாணவியை கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாணவன் அடைக்கலத்தை, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PREGNANT #CHILD