'அடக்க' முடியாமல் சிரித்து.. வாயை மூட 'முடியாமல்' அவஸ்தைப்பட்ட பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Sep 12, 2019 12:03 PM

சத்தமாக சிரித்து, அதனால் ஒரு பெண் அவஸ்தைப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Women left with mouth stuck open after laughing loudly

சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள டிரெய்னில் பயணம் செய்தபோது அங்கு நடைபெற்ற சம்பவம் ஒன்றைப் பார்த்து,அடக்க முடியாமல் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்துள்ளார்.தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அப்பெண் ஒருகட்டத்தில் வாயை மூட முடியாமல் அவஸ்தைப்பட தொடங்கி இருக்கிறார்.

இதனைப்பார்த்து அதே டிரெய்னில் பயணம் செய்த டாக்டர் ஒருவர், அவருக்கு நெஞ்சுவலி எதுவும் வந்து விட்டதா? என பரிசோதனை செய்து,பின்னர் அவரது வாய்ப்பகுதியில் இருந்த தாடை நகர்ந்து விட்டதை கண்டுபிடித்து சரி செய்துள்ளார்.

வாயை மூட முடியாமல் அப்பெண் இருக்க, டாக்டர் அவருக்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்'னு இனி யாரச்சும் சொல்வீங்க!

 

Tags : #TRAIN #CHINA #WOMEN