'ஜாலி' மூடில் இருந்த 'ஜோடிப்பாம்புகள்' மீது உட்கார்ந்த பெண்.. 'நடுங்க' வைத்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 12, 2019 01:25 PM

'பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்ற பழமொழி எந்த காலத்திற்கும் பொருந்தும் போல. இன்றும் கூட பாம்புகள் என்றால் அனைவருமே நடுங்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் தெரியாமல் பாம்புகள் மீது அமர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட முடிவு அனைவரையும் பதறச் செய்துள்ளது.

Uttar Pradesh women sits on snakes gets bitten and dies

உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த கீதா என்ற பெண், கடந்த புதன்கிழமை இரவு தாய்லாந்தில் வேலை செய்யும் தனது கணவர் ஜெய் சிங் யாதவ்வுடன் மொபைலில் பேசி இருக்கிறார்.நடந்து கொண்டு பேசிய அவர் வீட்டில் உள்ள பெட்ரூமிற்குள் சென்று பெட்டில் அமர்ந்து இருக்கிறார்.

அவரது கெட்ட நேரம் பெட்டில் இரண்டு பாம்புகள் படுத்து இருந்ததைக் கவனிக்கவில்லை. அவர் பெட்டில் உட்கார்ந்த உடன் பாம்புகள் இரண்டும் சேர்ந்து அவரைக்கடிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் சில நிமிடங்களில் கீதா மயக்க நிலைக்கு சென்று விட்டார்.இவரது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் கீதாவை சேர்த்துள்ளனர்.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து கீதாவின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் அங்கு இருந்த பாம்புகள் இரண்டையும் அடித்துக்கொன்று தங்கள் கோபத்தை தீர்த்துக் கொண்டனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள், கீதா அந்த பாம்புகளின் மீது அமர்ந்தபோது, அவை இரண்டும் இனச்சேர்க்கையில் ஈடுபட்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Tags : #UTTARPRADESH #WOMEN #SNAKES