‘இது பர்ஸ்ட் கொலை இல்ல...’ ‘என் மகன் அந்த பொண்ண கர்ப்பமாக்கிட்டான், அதனால தான்...’ அதிர வைக்கும் உச்சக்கட்ட கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளிக்கரணையில் குடிக்க சென்ற இடத்தில் கொலை செய்து மாட்டியவரின் வாக்குமூலத்தால் 5 மாதங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கு முடிவுக்கு வந்து போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 5ஆம் தேதி, சென்னை பள்ளிக்கரணையில் வேங்கை வாசல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கிற்கு குடிக்க சென்றுள்ளார் ஹென்றி ஜெயசில் என்னும் நபர். அதேப் பகுதியை சேர்ந்த சேவியர் அருள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அமுல்ராஜ் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஹென்றி ஜெயசில் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததைக் கண்ட இருவரும் அவருடன் பேசி நட்பாகி உள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு மது வாங்கி கொண்டு மூவரும் ஆட்டோவில் பெரும்பாக்கம் ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். போதையிலிருந்த ஹென்றியின் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு அவரை கழுத்து நெரித்து கொலை செய்து ஏரியில் வீசியுள்ளனர்.
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் ஆட்டோ டிரைவர் அமுல் ராஜ் மற்றும் சேவியர் அருளைக் கைது செய்தனர். இது குறித்து மேலும் விசாரித்த போது பல திடுக்கிடும் வாக்குமூலங்களை அளித்துள்ளார் அமுல்ராஜ். இந்த கொலைக்கு முன்பே சேவியர் ஒரு பெண்ணை கொலை செய்ததாகவும், கொலை செய்யப்பட்ட பெண்ணும் சேவியரின் மகனும் காதலித்து வந்ததாக கூறியுள்ளார்.
அதனடிப்படையில் சேவியரிடம் நடத்திய விசாரணையில், தன் மகன் மைக்கல் விஜய்க்கும் தனது மகளின் தோழியான ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு அப்பெண் கர்ப்பமானதாக கூறியுள்ளார். இதனால் அப்பெண்ணை பெரும்பாக்கம் ஏரிக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன், கை, கால்களை நைலான் கயிற்றால் கட்டி ஏரியில் வீசி சென்றதாக ஒப்புக்கொண்டார்.
அப்பெண்ணின் உடலை கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி சடலமாக மீட்டுள்ள போலீசார், அடையாளம் தெரியாத பெண் சடலம் என வழக்குப்பதிந்து விசாரித்து வந்துள்ளனர். தற்போது அந்த சடலம் யாரென்பதும், கொலைக்கு காரணம் யார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சேவியரின் மகன் மைக்கல் விஜய்யையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
