‘நேர்ல பாத்ததும் பின்வாங்கிருவான்னு நெனச்சேன்’.. ‘திட்டிக்கூட பாத்தேன்’.. ‘ஆனா..!’ நெட்டிசன்களை உருகவைத்த ‘காதல்கதை’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 06, 2020 12:33 PM

கேரளாவில் விபத்தில் சிக்கி வீல்சேரில் வாழ்க்கையை கடத்தி வரும் இளைஞரை இளம்பெண் காதலித்து திருமணம் செய்த சம்பவம் நெட்டிசன்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

kerala couple pranav shahana love story viral on social media

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இருஞ்ஞால குடா பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (27). சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி பிரணவின் உடல் செயலிழந்தது. இதனால் அவர் எழுந்து நடமாட முடியாத சூழல் ஏற்பட்டு வீல்சேரில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். ஆனால் வீல்சேரிலேயே முடங்கி விடாமல் பல இடங்களுக்கு வீல்சேரிலேயே பயணம் செய்து தன்னால் முடிந்த சமூகசேவை செய்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் பிரணவ், ஊனம் எதற்கும் தடையில்லை என பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் சஹானா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. தற்போது இவர்களது காதல்தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரணவ்வுக்கு சொந்த ஊர் திருச்சூர், சஹானாவுக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம், இருவரையும் இணைய காரணமாக அமைந்தது பேஸ்புக்தான். எப்போதும் சமூக வலைதளங்களில் ஏதேனும் வீடியோவை பிரணவ் பதிவிட்டு வந்துள்ளார். இவரது வைரலான போஸ்டுகளை சஹானா பார்த்துள்ளார். உடனே பேஸ்புக்கில் பிரணவ்வுக்கு ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். ஆனால் பிரணவ் அதை ஏற்கவில்லை. இதனை அடுத்து பேஸ்புக்கில் இருந்து பிரணவ்வின் செல்போன் நம்பரை எடுத்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்துள்ளார். இவர்களது பழக்கம் இப்படிதான் ஆரம்பித்துள்ளது.

ஒருநாள் தன்னுடைய காதலை பிரணவ்விடம் சஹானா வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் தனது நிலையைக் கூறி பிரணவ் நிராகரித்துள்ளார். ஆனாலும் சஹானா தனது காதலில் பிடிவாதாமாக இருந்துள்ளார். ‘என்னுடைய அவஸ்தை எனக்கு தெரியும். அதை அவளிடம் பலமுறை எடுத்துசொல்லிவிட்டேன். இருந்தும் அவள் கேட்கவில்லை. பிறகு எனது நண்பர்கள் மூலம் எனக்கு வேறு ஒரு காதல் இருப்பதாக கூறி திசை திருப்ப முயன்றேன். ஆனாலும் அதுவும் சரிப்பட்டு வரவில்லை. நண்பர்கள் மூலம் எனது நிலைமையை எடுத்துக் கூறினேன். அவர்கள் மூலம் திட்டியும் பார்த்தேன். ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத சஹானா என்மீதான காதலில் மட்டும் உறுதியாக இருந்தார்.

அவள் என்மீது வைத்திருக்கும் காதலை உணர்ந்து நானும் அவளை விரும்ப ஆரம்பித்தேன். சில நாள்கள் இருவரும் போன் மூலமாகவே பேசி வந்தோம். இந்த விவகாரம் அவளது வீட்டில் தெரியவே, என்னைப் பார்க்க திருச்சூர் வந்துவிட்டாள். அதுதான் நாங்கள் முதன்முதலில் நேரில் பார்த்த தருணம். நேரில் பார்த்த பின்னாவது என் அவஸ்தையை உணர்ந்து பின்வாங்கி விடுவாள் என எண்ணினேன். ஆனால் நான் நினைத்தது பொய்யானது. என்னைப் பார்த்த பின்னும் அவள் காதலில் உறுதியாக இருந்தாள். இனி ஒன்றும் செய்ய முடியாது என எண்ணி விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டேன். என் வீட்டில் உள்ளவர்கள் மூலமாகவும் சஹானாவுக்கு எடுத்துக்கூற முயன்றேன். ஆனால் அதுவும் தோல்வியில்தான் முடிந்தது’ என தெரிவித்துள்ளார்.

சஹானா தனது காதலில் விடாப்பிடியாக நிற்க மறுநாளே கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. சஹானா வீட்டில் இருந்து வெறும் 500 ரூபாயுடன் கிளம்பி வந்துள்ளார். பிரணவ் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தும் கூட ‘வாழ்ந்தால் பிரணவ்கூடதான்’ என சஹானா உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து தெரிவித்த சஹானா, ‘பேஸ்புக்கில் அவரது வீடியோ பார்த்து அவர்மீது இஷ்டம் வந்தது. அவரிடம் பேசிப் பழகியபோது அவரின் மனதைப் புரிந்துகொண்டேன். எல்லோருடை வீட்டைப் போலதான் என் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. சாதி, மதம் தாண்டி காதலிப்பதால் அந்த எதிர்ப்பைச் சமாளித்து ஆக வேண்டும். அதனால்தான் இனியும் வீட்டில் இருப்பது சரியல்ல என புறப்பட்டு வந்தேன். என் தோழிகள்கூட எனக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தனர். ஆனால் என் விருப்பத்தை மாற்றகொள்ள நான் தயாராக இல்லை. அதனால் எனது திருமணத்தை விரைவில் நடத்த முடிவு செய்தேன்’ என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

News Credits: Vikatan

Tags : #KERALA #MARRIAGE #LOVE #THRISSUR