‘விட்டுக் கொடுக்காததால் ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கும் தாலி கட்டிய இளைஞர்’.. ‘சிங்கிள்ஸ்களை சோதிக்கும் வீடியோ!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 03, 2020 04:37 PM

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து தாலிகட்டிய இளைஞரது செயல் விடியோவாக வைரலாகி வருகிறது.

ஒரே நேரத்தில் 2 காதலிகளை மணந்த இளைஞர் youth marries 2 girls at a time

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் லாவகமாக இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்து இருவருமே அவரை அணுகி வாதம் செய்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்த அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

தவிர, இரண்டு பெண்களுமே அந்த இளைஞரை, தங்கள் இருவரில் இன்னொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என தெரிந்தது. இதனால் ஒரே நேரத்தில் கோவில் முன்பாக வைத்து இருவருக்குமே அடுத்தடுத்து தாலி கட்டி மனைவிகளாக்கி சமாதானம் செய்துள்ளார்.

இந்த திருமணத்துக்கு இளைஞர் மற்றும் அவரது இரண்டு மனைவிகள் என மூவரின் குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்

இந்த தம்பதிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

 

Tags : #MARRIAGE #LOVE #YOUTH