'கல்யாண மேடையில் இருந்த மணப்பெண்... கல்யாணத்துக்கு வந்த முன்னாள் காதலன்!'... மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால்... கதிகலங்கிப்போன திருமண மண்டபம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 02, 2020 12:41 PM

கல்யாண மேடை வரை சென்று தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bride stops marriage at the last minute after seeing ex lover

தெலுங்கானா மாநிலம், வானபார்தி மாவட்டத்தில் உள்ள சார்லபள்ளி என்னும் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தபோது, மணமகன் திருமண மேடைக்கு வந்து மணப்பெண்ணின் வருகைக்காக காத்திருந்தார்.

பின்னர், மண மேடைக்கு மணப்பெண் வந்து அமர்ந்தார். அதைத் தொடர்ந்து, தாலியை எடுத்து மண மகளின் கழுத்தில் கட்ட மண மகன் சென்றபோது திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக மண மேடையில் இருந்து எழுந்தார் மண மகள். மேலும், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். பெற்றோர்களும் உறவினர்களும் எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும், அவர் யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்காமல் சென்றுவிட்டார்.

இதுகுறித்து பேசிய மணமகளின் பெற்றோர், திருமண மேடைக்கு வருவதற்கு முன்பு மண மகள் அவருடைய முன்னாள் காதலனை பார்த்துள்ளதாகவும், அதனால் திடீரென மனம் மாறி திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் கூறினர். மேலும், அந்த இளைஞரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மணப்பெண்ணே மண மேடையில் திருமணத்தை நிறுத்தியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : #TELANGANA #MARRIAGE #LOVE #BRIDE