'ப்ளீஸ் நாம மேரேஜ் பண்ணிக்கலாம்டா...' 'ஒழுங்கா அபார்சன் பண்ணிடு, இல்லன்னா...' புள்ளிங்கோ செய்த மிரட்டல் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 03, 2020 12:16 PM

தூத்துக்குடியில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுக்கும் காதலன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Lover who threatens to conceive and dissolve the fetus

தூத்துக்குடி மாவட்டம் மேல அழகாபுரியினை சேர்ந்த சிவபெருமாள் என்பவரின் மகள் காசி ராமலெட்சுமி. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டருகே வசித்து பெருமாள் என்பவரது மகன் வினித்தினை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காசி ராமலெட்சுமியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்ற வினித், ராமலெட்சுமியினை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமடைந்த ராமலெட்சுமி வினித்திடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்த போது ”உன்னை பலாத்காரம் செய்தபோது அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறேன், அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன்” என்றும் வினித் மிரட்டியுள்ளார்.

மிரட்டியதை தொடர்ந்து, தனது பெற்றோர்களிடம் ராமலெட்சுமியினை அழைத்து சென்று வயிற்றில் உள்ள கருவினை கலைக்கும்படியும் வற்புறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரையும், அவரது பெற்றோர்களையும் கைது செய்து தனக்கு உரிய பாதுகாப்பும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கும்படி  காசி ராமலெட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Tags : #LOVE