'எப்படியும் உங்கள வந்து சேருவேன்மா'.. தாயைக் கண்டுபிடித்த வெளிநாட்டு மகன்.. 39 வருஷ பாசப்போராட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 16, 2019 10:57 AM

1979-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த கலியமூர்த்தி-தனலட்சுமி தம்பதியர், வறுமை காரணமாக தங்கள் மகனை சென்னை பலலாவரத்தில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் டென்மார்க் தம்பதியருக்கு தத்துக் கொடுத்தனர்.

tamil man from denmark finds his own mother after 39 yrs

அதுவரை சாந்தகுமார் என்கிற பெயரில் இருந்தவர், டென்மார்க்கில் டேவிட் கில்டெண்டல் நெல்சன் என்ற பெயரில் வளர்க்கப்பட்டார். அதன்பின் வளர்ந்து டென்மார்க் பள்ளி ஆசிரியை ஒருவரை மணந்த டேவிட் சாந்தகுமாருக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்கிற ஆசையை வளர்ப்பு பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அப்படித்தான் 2013-ஆம் ஆண்டு இந்தியா வந்து தனது தாயைப் பற்றிய விபரங்களுடன் அவரைத் தேடினார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையில் தமிழ்நாடு வந்த சாந்தகுமார், தனது தாய் பற்றி ஒன்றும் தெரியாமல் ஏமாற்றுத்துடனே அயல்நாடு திரும்பினார்.

அவருக்கு மும்பையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் உதவி புரியவே, சென்னை பல்லாவரம் தொண்டு நிறுவனம் பற்றிய தகவல் அறிந்தனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு பிறகு சாந்தகுமாரின் ஆவணங்கள் பெறப்பட்டன. அப்போதுதான் சாந்தகுமாரின் அண்ணன் ராஜனும் டென்மார்க்குக்கு தத்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. ஆனாலும் தனது சொந்த ஊர் தஞ்சாவூர் என்பதை அறிந்த சாந்தகுமார், வழக்கறிஞர் ஒருவரின் உதவியோடும் விகடன் இதழின் உதவியோடும் தாயைத் தேடும் படலத்தில் ஈடுபட்டார். எனினும் கண்டுபிடித்துவிடுவேன் என்கிற நம்பிக்கையுடன் டென்மார்க் சென்றவருக்கு ஒருவழியாக, அவரது தாய் மணலியில் உள்ள தனது மகன் சரவணனுடன் வசித்து வந்தது தெரியவந்தது.

உடனே அங்கிருந்து வீடியோ காலில் போன் செய்துவிட்டார். தான் கற்றுக்கொண்ட சிறுசிறு தமிழ் வார்த்தைகளை பேசிய சாந்தகுமார், நவம்பரில் குடும்பத்துடன் தமிழகம் வருவதாகக் கூறியுள்ளார். 39 வருடங்கள் கழித்து மகன் தன்னுடன் பேசியதால் தாஉ தனலட்சுமி உருகியுள்ளார்.

Tags : #HEARTMELTING #MOTHER #SON