'நாடகம் ஆடியது உண்மைதான்'.. தாய், தந்தையரை தீர்த்து கட்டிய மகனின் அதிரவைக்கும் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 12, 2019 10:59 PM

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கண்ணங்கோட்டை நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி வெள்ளையம்மாள் இருவருக்குமான மகன் சோனைமுத்து திருமணமானவர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆறுமுகம் இறந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் வெள்ளையம்மாளும் இறந்துள்ளார்.

Sivagangai son kills father and mother for property

ஆனால் தந்தை ஆறுமுகத்தின் தலையில் கம்பி விழுந்ததால் இறந்ததாகவும், வெள்ளையம்மாள் இயற்கையாக இறந்ததாகவும் சோனைமுத்து கூறியதை சிலர் சந்தேகித்ததோடு, தேவகோட்டை காவல் நிலையத்தில் இருந்து வந்து விசாரித்தபோதும் கூறியுள்ளனர். இதனை அடுத்து போலீஸார் சோனைமுத்துவை விசாரித்தனர்.

அப்போதுதான், திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 6 செண்ட் நிலம் கையப்படுத்தப்பட்டதற்காக, நஷ்ட ஈடாக வந்த 7 லட்ச ரூபாய்க்காக, தாய் தந்தையர் இருவரையும் கொன்றுவிட்டு, நாடகமாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #PARENTS #SON