‘4 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லை’.. ‘தாயை அனாதையாக சாலையில் விட்டுச்சென்ற மகன்’ நெஞ்சை உருக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 03, 2019 04:32 PM

ஜெயங்கொண்டம் அருகே பெற்ற தாயை மகன் சாலையில் அனாதையாக விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Mother left orphan by their sons on the street in Jayankondam

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்ந்தபுரம் பகுதியில் உள்ள கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பட்டம்மாள் (95). இவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு சண்முகம், சதாசிவம் என்ற இரு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் சதாசிவம் ஓய்வு பெற்ற ஆசிரியர், சண்முகம் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் மூதாட்டியை சரியாக கவனக்காததாக கூறப்படுகிறது. அதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதியோர் இல்லத்தில் மூதாட்டி பட்டம்மாளை சேர்த்துவிட்டுள்ளார். இதனை அடுத்து மகன்களை பார்ப்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து பட்டம்மாள் வந்துள்ளார். ஆனால் இரு மகன்களும் வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மகள் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சில காலம் வைத்திருந்த மகள் மீண்டும் தன்னுடைய சகோதரர் சண்முகம் வீட்டுத் திண்ணையில் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சண்முகம் தன்னுடைய மற்றொரு சகோதரரான சதாசிவம் வீட்டு வாசலில் பட்டம்மாளை விட்டுள்ளார். இதனை அடுத்து சதாசிவம் தனது தாயை சாலையில் பரிதவிக்க விட்டுச் சென்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றதாயை மகன்களே சாலையில் அனாதையாக தவிக்கவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SONS #MOTHER #JAYANKONDAM #ARIYALUR #ORPHAN