‘அம்மானு சொல்லிட்டே கீழ விழுந்தா’.. மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய சித்தியின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 09, 2019 05:09 PM

சென்னையில் மாடியில் இருந்து குழந்தையை வீசியது குறித்து குழந்தையின் சித்தி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Surya Kalas confession statement about how to kill the daughter

சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்பவருடன் திருமணம் ஆகி ராகவி என்ற 6 வயது குழந்தை உள்ளது. ஆனால் சரண்யா கடந்த 2014 -ம் ஆண்டு உயிரிழந்ததால் சூர்யகாலா என்ற பெண்ணை இரண்டவதாக பார்த்திபன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை ராகவி வீட்டின் அருகில் உள்ள புதரில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சூர்யகலா முன்னுக்குபின் பதிலளித்துள்ளார். இதனால் அவரிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை போலீசார் எழுப்பியுள்ளனர். அப்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், ‘பார்த்திபனுக்கும் சரண்யாவுக்கும் பிறந்த குழந்தைதான் ராகவி. சரண்யா இறந்துவிட்டதால் பார்த்திபன் என்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். எங்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. ராகவியை கவனித்துக்கொள்ள சரண்யாவின் அம்மா வளர்மதி எங்களுடன் தங்கியிருந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் பார்த்தீபனுக்கு எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ராகவியையும், வளர்மதியையும் பலமுறை வீட்டிலிருந்து ஊருக்கு அனுப்ப சொல்லியும் அவர் கேட்கவில்லை’ என சூர்யகலா போலீசரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் கூறிய அவர், நான் பிஎஸ்சி நர்சிங் படித்துள்ளேன். ஆனால் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நான் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனேன். இந்த விஷயத்தை எனது கணவரிடம் கூறினேன். அதற்கு ஏற்கனவே நமக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது, மூன்றாவதாக குழந்தை வேண்டாம் எனக் கூறினார். இதனால் பார்த்திபனுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் ராகவியை கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால் எந்நேரமும் ராகவியுடன் அவரின் பாட்டி இருந்தார். அப்போதுதான் ஆயுதபூஜைக்காக ராகவியின் பாட்டி ஊருக்கு சென்றார். இதனால் ராகவி மட்டும் வீட்டில் இருந்தார்.

அப்போது அவரிடம் அன்பாக பேசி மாடிக்கு அழைத்துச் சென்றேன். ராகவியும் என்னுடன் மாடிக்கு வந்து விளையாடினாள். அந்த சமயம் வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்க சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் உடனே ராகவியை மாடியில் இருந்து தூக்கி வீசினேன். அம்மா என சொல்லிக்கொண்டே ராகவி கீழே விழுந்தாள். இதனை அடுத்து எதுவும் தெரியாததுபோல் குழந்தையை காணவில்லை எனத் தேடினேன். அப்போது வீட்டின் அருகில் இருந்த புதரில் இருந்து ராகவி மீட்கப்பட்டார். மருத்துவமனையில் ராகவி உயிரிழந்ததாக தெரிவித்ததும் எனக்கு பயம் ஏற்பட்டது. இதனை அடுத்து 2 அடி உயரமுள்ள சுவற்றில் எப்படி ராகவி ஏறினார் என போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு என்னால் சரியாக பதிலளிக்கமுடியவில்ல. இந்த கேள்வியால் நான் சிக்கிகொண்டேன் என சூர்யகலா கூறியுள்ளார்.

Tags : #CHENNAI #MOTHER #BABY #TAMILNADU