'பணம் இருந்து என்னத்துக்கு ஆகுறது?'...'அம்மா'வ இந்த நிலையில பாக்க முடியல'...சென்னை என்ஜினீயரின் அதிரவைக்கும் முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 01, 2019 05:51 PM

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தம்பதியர் ஆர்.எஸ்.ராய் (71) மற்றும் கோகிலா ராய் (70). இந்த தம்பதியரின் 49 வயதான எட்வர்ட் பிரதீப் குமார், திருமணம் செய்துகொண்டும், அங்கேயே குடியுரிமை பெற்றுக்கொண்டும் தனது, இரண்டு பெண் குழந்தைகள், மனைவியுடன் அமெரிக்காவின் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

chennai engineer commits suicide not bearing mom\'s cancer pain

இந்த நிலையில், தனது அம்மா கோகிலா ராய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்த தகவலை அடுத்து, மனமுடைந்து போன எட்வர்ட் பிரதீப் குமார், உடனே சென்னை விரைந்து, தனது தாயாருக்கு எவ்வளவும் பணம் செலவானாலும் பரவாயில்லை புற்று நோயைக் குணப்படுத்துங்கள் என்று கோரியுள்ளார்.

ஆனால் மருத்துவர்களோ, எட்வர்டின் தாயார் அந்த நிலையைத் தாண்டியதாகவும் இனி காப்பாற்றுவது கடினமான காரியம் என்றும் கூறியுள்ளனர். இதனை அடுத்து அமெரிக்கா சென்ற எட்வர்டு, அங்கு கொஞ்ச நாள் வேதனையுடனே காலத்தை கழித்துவிட்டு தனது தாயாரின் நோய்த்துயரம் தாளாமல், மீண்டும் சென்னைக்கே வந்து தனது தாய் தந்தையருடன் தங்கினார்.

ஆனால் எட்வர்டின் தந்தை ஆர்.எஸ்.ராய், எட்வர்டிடம், கோகிலாவை தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி, அவரை அமெரிக்காவுக்கே திரும்பச் சொல்லியிருக்கிறார். அதற்கு எட்வர்டும் டிக்கெட் வந்ததும் செல்வதாக கூறியுள்ளார். இதனிடையே தனது தாயாருக்கு கொடுக்கப்படும் புற்றுநோய் சிகிச்சைகளின்போது அவர் அலறுவதைக் கேட்டு எட்வர்டு துடித்துப் போயிருக்கிறார்.

ஆனால், அமெரிக்காவில் பணம், புகழ், நல்ல உத்தியோகம், நல்ல குடும்பம் என்று வாழ்ந்துகொண்டிருந்த எட்வர்ட் பிரதீப் குமார், தனது தாயாரை கவனிக்க முடியாத துக்கத்தில், சென்னையில் அவர் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

Tags : #CHENNAI #MOTHER #SON #SAD