'அம்மாவோட உறவ நிறுத்திக்கச் சொல்லி.. எவ்ளவோ சொன்னேன்'.. 'ஆத்திரத்தில் 19 வயது சிறுவன் செய்த காரியம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 08, 2019 06:03 PM

வேலூரைச் சேர்ந்த பீடி உற்பத்தித் தொழிலாளியான 52 வயது ரகுவை திடீரென நேற்று முன்தினம், இரவு வேளையில் மர்ம நபர் யாரோ அரிவாளாள் யாரோ வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

son kills his mothers affair goes bizarre in TamilNadu

இதனை அடுத்து விசாரித்ததில், ரகுவின் 29 வயதான மகன் தனசேகர் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அவற்றை திருப்பிக் கேட்டு சிலர் தகராறு செய்ததாகவும், அதனால் அவர்களில் யாரேனும் இதைச் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து, கடைசியாக கடனைத் திருப்பி கேட்டு வந்த நபரை விசாரித்தனர்.

ஆனால் அந்த கிடுக்குப்பிடி விசாரணையிலும் அவர், தான் செய்யவில்லை என்று கூறியதை அடுத்துதான் வழக்கில் திருப்பங்கள் உண்டாகின. அதன்படி, ரகு அதே பகுதியில் பாபு என்பவரின் மனைவியான சங்கீதாவுடன் தொடர்பில் இருப்பதும், இந்தத் தொடர்பால் சங்கீதாவின் கணவர் பாபு சங்கீதாவை 8 மாதங்களுக்கு முன்னர் பிரிந்து சென்றதும் தெரியவந்தது.

அதன் பிறகு சங்கீதா தனது 19 வயது மகன் விஜய்யுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் தனது தாயுடன் தொடர்பு வைத்திருந்த ரகுவை விஜய் கண்டித்துள்ளார். ஆனால் தண்ணீர் கேன் போடும் வேலை செய்யும் விஜய்யை, ரகு மீண்டும் மிரட்டும் தொனியில் பேசியதாகத் தெரிகிறது. இதனை அடுத்து விஜய்யை போலீஸார் விசாரித்தனர்.

இதனால் மனம் வெதும்பிய விஜய், தனது குடும்பம் பிரிந்ததற்கும், தனது தாயின் நடத்தை சரியில்லாததற்கும், ரகுதான் காரணம்  என்று ஆத்திரத்தில் ரகுவை கொலை செய்ததாக வருந்தி, கண்ணீர் விட்டு கதறியதோடு போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார் விஜய். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SON #MOTHER #CASE