‘ஒரு மாசமா தேடியும் கிடைக்காத அம்மா’.. ‘மகன் சொன்ன ஒரே ஒரு பதில்’.. மிரண்டு போன போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 14, 2019 05:02 PM

பெற்ற தாயை மகனே கொலை செய்து வீட்டுக்குள் புதைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

84 year old woman killed by son over property in Kerala

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள செம்மம்முக்கு பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (84). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சுனில் என்பவரின் வீட்டில் சாவித்திரி தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 3 -ம் தேதியில் இருந்து சாவித்திரி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து சாவித்திரியின் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் பல நாட்களாகியும் சாவித்திரி குறித்து தகவல் போலீசாருக்கு கிடைக்காமல் இருந்துள்ளது. இதனிடையே சுனிலின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பம் முதலே சுனில் விசாரணை ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து போலீசாரிடம் ஒரே ஒரு தகவலை மட்டும் சொல்லியுள்ளார்.  அது ‘அம்மா கொன்னு வீட்டுல புதைச்சுட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

இவரின் வாக்குமூலத்தைக் கேட்டு மிரண்டு போன போலீசார் உடனடியாக அவரின் வீட்டுக்கு சென்று சாவித்திரியின் சடலத்தை மீட்டுள்ளனர். ஒரு மாதம் ஆனதால் சாவித்திரின் சடலம் சிதைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுனிலிடம் நடத்திய விசாரணையில், அவர் மது போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக மது குடிக்கும்போது நண்பரை கொலை செய்தற்காக சிறை சென்றுள்ளார். மேலும் இவரிடம் கஞ்சா பிடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சாவித்திரியின் பென்சன் பணத்தை கேட்டு அடிக்கடி சுனில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டை தனது பேரில் எழுதி தர வேண்டும் என சுனில் கேட்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் நண்பர் குட்டன் என்பவருடன் சேர்ந்து சாவித்திரியை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #WOMAN #KERALA #SON #KILLED #PROPERTY