அம்மா பக்கத்துல தூங்கிய குழந்தையை நைசாக கடத்திய பெண்..! அதிர்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 09, 2019 10:41 AM

உத்தரபிரதேசத்தில் தாயின் அருகே தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஒரு ஆணுடன் வந்த பெண் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: A woman and a man steal an 8 month old baby in UP

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் நகரில் உள்ள கல்ஷாஹீத் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் தாயின் அருகே 8 மாத பச்சிளம் குழந்தை தூங்கிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது அங்கு ஒரு ஆணுடன் வந்த பெண் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் செல்ல முயற்சிக்கிறார். பாதுகாப்பாக அருகில் அந்த ஆண் நிற்க எந்தவித பதற்றமும் இல்லாமல் சொந்த குழந்தையை தூக்குவதுபோல் வெகு இயல்பாக திருடி செல்கின்றனர்.

இந்த காட்சி பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மக்கள் நடமாட்டம் இருந்தபோது குழந்தையை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #WOMAN #STEAL #BABY #MOTHER #GALSHAHEED #BUSSTAND #UTTARPRADESH