6 வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சித்தி..! சென்னையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 09, 2019 12:24 PM
சென்னையில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை அருகில் உள்ள அஸ்தினாபுரத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். அவரது குழந்தை ராகவி (6). ராகவி அருகில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுமியை உடனடியாக அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கவனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிறுமியின் தாய் சூர்யகலா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது சூர்யகலா சிறுமியை இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசியதாக ஒப்புக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யகலா சிறுமியின் இரண்டாவது தாய் என்பதும் இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.