'நீ செஞ்சது பெரிய உதவி தாயி'...'கண்ணீர் விட்டு கதறிய பாட்டிம்மா'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்By Siva Sankar | Sep 30, 2019 12:15 PM
மத்திய பிரதேசத்தின் தமாஹோ மாவட்டத்திற்குட்ப்பட்ட மார்கோன் பகுதி காவல் நிலையக் காவலர் ஷ்ரதா சுக்லா. இவரின் இளகிய, கருணையான மனப்பான்மையே இவருக்கு பாராட்டுக்களை குவிந்து வருவதற்கான காரணமாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக இணையத்தில் வலம் வரும் வீடியோ ஒன்றில் ஷ்ரதா சுக்லா, தன்னிடம் வந்த வயதான மூதாட்டிக்கு உடலில் அணியும் ஆடையும், காலுக்கு செருப்பும் கொடுத்து உதவுகிறார். அவற்றை வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டி உடைந்து அழுத் தொடங்குகிறார்.
அவரைத் தேற்றும் ஷ்ரதா சுக்லாவை, அந்த மூதாட்டி மீண்டும் கட்டிப்பிடித்து தனது ஆற்றாமையைப் போக்கிக் கொள்ளும் அந்த காட்சியை காண்பர்வகள் கண் கலங்காமல் இருக்க முடியாது. அந்த வீடியோவைத்தான் மத்திய அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் பகிர்ந்துள்ளார்.
அதோடு, ஷ்ரதா சுக்லா போன்ற மத்திய பிரதேசத்தின் மகள்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது என்றும் அமைச்சர் அந்த ட்வீட்டில் மேற்கோள் காட்டியுள்ளார்.
दमोह जिले की मगरोन थाना प्रभारी श्रद्धा शुक्ला जैसी बेटियों पर मध्यप्रदेश को गर्व है। बेटियां सबके दु:ख को समझती हैं वे हर घर का उजाला हैं। इन्हीं से सृष्टि धन्य हुई है। यही तो इस संसार को खुशियों से समृद्ध करेंगी। बेटी श्रद्धा को स्नेह, आशीर्वाद, शुभकामनाएं! pic.twitter.com/yGtdVnP5iG
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) September 26, 2019