‘சாரி அம்மா.. நான் எந்தப் பொண்ணையும் காதலிக்கல’.. ‘கடிதம் எழுதிவிட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 30, 2019 09:40 PM

தான் எந்தப் பெண்ணுடனும் காதலில் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Lucknow Teen boy commits suicide leaves letter to mother

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பானு பிரதாப் சிங் (19). தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வந்த பானு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீண்ட நேரமாகியும் தனது அறையிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவருடைய குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது பானு சடலமாக தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன அவருடைய குடும்பத்தினர் போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் போலீஸ் விசாரணையில் பானுவின் அறையிலிருந்து அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், “என்னை மன்னித்துவிடு அம்மா. நான் போகிறேன். நான் எந்தப் பெண்ணுடனும் காதலில் இல்லை” என எழுதப்பட்டிருந்துள்ளது. ஆனால் அவருடைய குடும்பத்தினர் ஏன் பானு தான் யாருடனும் காதலில் இல்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார் எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #LUCKNOW #TEEN #BOY #COLLEGE #STUDENT #SUICIDE #LETTER #MOTHER #GIRLFRIEND #LOVE