‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Oct 03, 2019 12:36 PM
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை கையில் ஆட்டியபடி புகை பிடித்து அதை ஃபேஸ்புக்கில் நேரலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தைச் சேர்ந்த டைப்ரஸா செக்ஸ்டன் என்ற பெண் தான் புகை பிடிப்பதை ஃபேஸ்புக் நேரலையில் பகிர்ந்துள்ளார். அப்போது பிறந்து ஒரு மாதமே ஆன தனது பச்சிளம் குழந்தையை அவர் ஒற்றைக் கையால் ஆட்டியபடியே புகை பிடித்துள்ளார்.
டைப்ரஸாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக டைப்ரஸாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Tags : #US #WOMAN #FACEBOOK #LIVE #VIDEO #SHOCKING #BABY #MOTHER #SMOKE #CIGARETTE #CHILDABUSE
