‘சீட் பெல்டைக் கழற்றச் சொல்லி’.. ‘உச்ச போதையில்..’ ‘4 குழந்தைகளின் உயிருடன் விளையாடிய தாய்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 04, 2019 08:20 PM

அமெரிக்காவில் தனது குழந்தைகளிடம் சீட் பெல்டைக் கழற்றச் சொல்லிவிட்டு போதையில் காரை வேண்டுமென்றே மரத்தில் மோதிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Florida mother crashes car into tree to try to kill kids cops say

புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த கால்சியா வில்லியம்ஸ் (36) என்ற பெண் தனது 4 குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அதிக போதையில் இருந்த அவர் தனது குழந்தைகளிடம் சீட் பெல்டைக் கழற்றச் சொல்லிவிட்டு காரை வேகமாக மரத்தின்மீது மோதியுள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் கால்சியா தான் போதையில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின் தனது கணவர் தன்மீது சாத்தானை ஏவி விட்டதால்தான் விபத்து நடந்தது எனக் கூறி நாடகமாடியுள்ளார்.

இதையடுத்து இந்த விபத்தில் காயமடைந்த கால்சியாவின் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 4 குழந்தைகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் கால்சியா குழந்தைகளிடம், சீட் பெல்டைக் கழற்றிவிட்டு கைகளை வெளியே நீட்டுங்கள், பேய்கள் நல்லவர்களை ஒன்றும் செய்யாது, கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிவிட்டு காரை மரத்தில் மோதியது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸார் கால்சியா மீது 4 கொலை முயற்சி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : #US #MOTHER #CHILDREN #FLORIDA #CAR #CRASH #TREE #SEATBELT