‘நொடியில் நடந்த கோர விபத்து’... ‘தாய்-மகள் பலியான சம்பவம்’... 'சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியீடு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 05, 2019 10:40 PM

லாரி மோதியதில் தாய்-மகள் உயிரிழந்த விவகாரத்தில், தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

mother and daughter died in accident cctv footage released

நாமக்கல் மாட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வாத்தியார் தோட்டம், பகுதியில் வசித்து வந்தவர் சித்ரா. வணிக உதவியாளராக பணியாற்றி வந்த இவர், வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சென்று, மகன் யஷ்வந்த்தை (9) ஒரு பள்ளி வேனில் ஏற்றிவிட்டார். பின்னர், தனது மகள் இன்சிகாவை (7) வேறு ஒரு பள்ளி வேனில் ஏற்றிவிட, சேலம்-கோவை நெடுஞ்சாலையை கடப்பதற்கு நின்றுகொண்டிருந்தார். அப்போது பள்ளி வேன் ஒன்று சாலையை கடந்தபோது, இவர் சாலையின் மற்றொருபுரத்தை கவனிக்காமல், சென்றார்.

அப்போது அதிவேகத்தில் வந்த லாரி, கடந்த வெள்ளிக் கிழமையன்று மோதியதில், சித்ரா மற்றும் அவரது மகள் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். கடந்த ஒருவாரத்திற்கு முன்னர்தான், அவரது மாமனார், அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி, கோமாநிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், மனைவியும், மகளும் உயிரிழந்ததால், கணவர் ஜெயக்குமார் கதறித் துடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சித்ரா சாலையை கடக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது ‘புதிய தலைமுறை சேனலில்’ வெளியிடப்பட்டுள்ளது.

Tags : #ACCIDENT #NAMAKKAL #MOTHER #DAUGHTER