திடீரென 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்..! சென்னை மெரினா பீச்சில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 10, 2019 12:41 PM

சென்னை மெரினா கடற்கரையில் 2 குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Mother kills children and tries to kill herself in Chennai

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை பெண் ஒரு தனது பெண் குழந்தை உட்பட 2 குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கத்தியால் குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு தன்னுடைய கழுத்தையும் அதே கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து மெரினா காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தாய் மற்றும் குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் பெண் குழந்தை வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த தாய் ஆண் குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும், தாய் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பெண் பெங்களூரைச் சேர்ந்த பவித்ரா (32) என்பதும், அவரது மகள் தனுஸ்யா (6) மற்றும் மகன் (3) என்பதும் தெரியவந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SUICIDEATTEMPT #CHENNAI #MARINA #BEACH #MOTHER #CHILDREN