'என்னோட மதுபாட்டில எடுத்து ஏன் குடிச்ச'... 'தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Oct 03, 2019 06:56 PM

வீட்டில் வாங்கி வைத்திருந்த மதுவை எடுத்து குடித்த தந்தையை, தாயின் முன்னிலையில் மகன் அடித்து உதைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

son thrashes father allegedly disposing liquor saved dry day

“எனக்குத் தெரியாது.. நான் அதை எடுக்கவில்லை” என்று பயத்தில், 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், இளைஞரிடம் அரை நிர்வாணகோலத்தில், மிகவும் கொடூரமாக அடி வாங்கும் வீடியோ காட்சிகள், கேரளாவில் வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரலானது. இதையடுத்து, போலீசார் விசாரணையில் இறங்கினர். அதில், கேரளா மாநிலம் ஆழப்புழாவில் உள்ள குரதிக்காடு பகுதியைச் சேர்ந்தவரான 29 வயது இளைஞர் ரத்தீஸ் மற்றும் அவரது தந்தை என்பது தெரியவந்தது.

மகன் ரத்தீஸ், கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகள் விடுமுறை என்பதால்,  அக்டோபர் 1-ம் தேதியான செவ்வாய்கிழமை அன்று, மதுபாட்டில் ஒன்று வாங்கி வந்து, வீட்டில் மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். இதனைக் கண்ட அவரது தந்தை, அதை எடுத்து குடித்துவிட்டதாகத் தெரிகிறது. பின்னர், வீட்டிற்கு வந்த மகன் ரத்தீஸ், மதுபாட்டில் காணததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சந்தேகமடைந்த மகன் ரத்தீஸ், தனது தந்தையை கடுமையாக தாக்த ஆரம்பித்தார். எனக்கு தெரியாது என்று தந்தை கெஞ்சியும் கேட்காமல், அவரை கொடூரமாக காலால் எட்டி உதைத்து தாக்க ஆரம்பித்தார்.

அவர் தாக்குதலை, அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் தடுக்க முயன்றும், மகன் ரத்தீஸ் தாக்க ஆரம்பித்தார். வலிதாங்கமுடியாமல், அந்த தந்தை மகனிடம் மதுவை எடுத்து குடித்ததற்கு மன்னிப்பு கேட்டும், மகன் அடித்துக் கொண்டிருந்தார். இதனை அருகில் இருந்தவர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ ஆரம்பத்தில், பசுமை கேரளா என்ற பேஸ்புக் குழுவில் அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்பட்டு வைரலானது. பின்னர் போலீசாரின் நடவடிக்கைக்குப் பின்னர் அந்த வீடியோ காட்சிகள் அகற்றப்பட்டன.  மேலும் தந்தையை தாக்கிய ரத்தீஸ் மீது, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்த போலீசார், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Tags : #KERALA #THRASHES #FATHER #SON