'மணமாகி 25 நாள்ல மனைவி பிரிஞ்சுட்டா'.. 'ஆனாலும் நீ திருந்தலயா?'.. புதுமாப்பிள்ளையை கொன்ற தந்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 09, 2019 03:44 PM

தேனி அருகில் உள்ள பூதிப்புரம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த தங்கராஜுக்கு இரண்டு மகன்கள்.

father kills his own son after he asked money to drink

அவர்களுள் ஒருவரான மலைச்சாமி என்பவர் சென்னையில் உள்ள பெரம்பூரில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் ஜோதி என்பவருக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் தனது கணவர் மலைச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்ததால், ஜோதி தனது தந்தை வீட்டுக்குச் சென்றதாகவும், இதனால் மலைச்சாமியின் தந்தை தங்கராஜ் மலைச்சாமியை கண்டித்ததாகவும் தெரிகிறது.

இதனிடையே, குடித்துவிட்டு மீண்டும் தன் வீட்டுக்கு வந்த மலைச்சாமி, மேலும் குடிப்பதற்காக வேண்டி தனது தந்தை தங்கராஜிடம் பணம் கேட்டு குடைச்சல் கொடுத்துள்ளார். ஆனால் பொறுமையை இழந்த தங்கராஜ், தனது மகன் என்றும் பாராமல், ஆத்திரத்தில் மலைச்சாமியின் கழுத்து, கை, மணிக்கட்டு என எல்லா இடத்திலேயும் சரமாரியாகக் குத்த, மலைச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பின்னர், தனது கணவரை, அவரது தந்தையே குத்திக் கொன்றுவிட்டார் என்று ஜோதி கொடுத்த புகாரின் பேரில், தங்கராஜ் மீது பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : #FATHER #SON #CASE #DRUNK