'சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு'... 'எதார்த்தமாக பார்சலை திறந்த அதிகாரிகள்'... கைதான இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 22, 2020 11:57 AM

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட குரங்கு, மர அணில் உள்ளிட்ட உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Smuggler caught with Abducted Animals at Chennai airport

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் கொண்டு வந்த பார்சலை திருந்து பார்த்தபோது, அதில்  தாய்லாந்தில் இருந்து குரங்கு, அணில், ஓணான், பல்லி உள்ளிட்ட 27 உயிரினங்களை கூடையில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுரேஷையும் உயிரினங்களை வாங்க வந்த மேலும் இருவரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட உயிரினங்கள் மூலம் நோய் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளதால் அதனை விமானம் மூலம் அதிகாரிகள் தாய்லாந்துக்கே அனுப்பி வைத்தனர். உயிரினங்களை கடத்தி வந்தது தொடர்பாக சுரேஷ் உள்ளிட்ட 2 பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CHENNAI #AIRPORT #THAILAND #SMUGGLER