‘இப்படிதான் முடி வெட்டுவியா?’... ‘பொங்கலுக்கு’ வந்த ‘மகனை’ கண்டித்ததால்... சென்னையில் நடந்த ‘அதிரவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 20, 2020 11:05 AM

சென்னையில் தலைமுடியை வெட்டிக்கொள்வது தொடர்பாக தாயுடன் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chennai Boy Commits Suicide After Fight With Mother Over Haircut

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகனா என்பவருடைய மகன் சீனிவாசன் (17). இவர் குன்றத்தூரில் தங்கி அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த சீனிவாசன் முழுமையாக முடியை வெட்டாமல் ஸ்டைலாக வெட்டி வந்துள்ளார்.

அதைப் பார்த்த மோகனா, “இப்படியா முடி வெட்டுவது? படிக்கும் வயதில் ஏன் இப்படி வெட்டினாய்?” என மகனைக் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்திருந்த சீனிவாசன் தாய் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்து வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய மோகனா மகன் தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து உறைந்துபோய் நின்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிச்சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #SCHOOLSTUDENT #CHENNAI #HAIRCUT #BOY #MOTHER