ஒரேயொரு ‘ஓடிபி’ தான்... ‘நிமிடங்களில்’ செல்போனை ‘ஹேக்’ செய்து... ‘சென்னைக்காரருக்கு’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 18, 2020 06:48 PM

சென்னையில் ஓடிபி எண் உதவியுடன் செல்போனை ஹேக் செய்து, ஒருவருடைய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

Chennai Man Loses Rs 15000 In Online OTP Fraud

சென்னையைச் சேர்ந்த குமரேசன் என்பவருடைய செல்போனுக்கு சமீபத்தில் ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், “நீங்கள் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் பேடிஎம் (Paytm) கணக்கில் அடையாள சான்று ஆவணங்கள் (KYC) முறையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதனால் உங்கள் பேடிஎம் கணக்கு இன்னும் 3 நாட்களில் செயலிழந்துவிடும்” எனக் கூறப்பட்டிருந்துள்ளது. அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து குமரேசனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், “நான் பேடிஎம் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். KYC ஆவணங்களை நான் கூறும் வழிமுறைகளின்படி, செல்போன் மூலமாகவே பதிவேற்றம் செய்யலாம்” எனக் கூறியுள்ளார்.

அதை நம்பிய குமரேசன் அவர் கூறியபடியே ஸ்மார்ட்டர் என்ற செயலியை தன் செல்போனில் பதிவிறக்கம் செய்ததும், அவருடைய செல்போனுக்கு ஒரு ஓடிபி எண் வந்துள்ளது. அந்த ஓடிபி எண்ணை தெரிவிக்குமாறு அந்த நபர் கூற, குமரேசனும் அவரிடம் ஓடிபி எண்ணைப் பகிர்ந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே குமரேசனின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 15 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த குமரேசன் உடனடியாக இதுபற்றி போலீசாரிடமும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “ஸ்மார்ட்டர் என்பது நம் செல்போனில் உள்ள தகவல்கள் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மற்றொரு நபருக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு ஹேக்கர் செயலி. இதை நம் செல்போனில் பதிவிறக்கம் செய்ததும் வரும் ஓடிபி எண்தான், அதற்கு ஒப்புதல் தருவதற்கான அனுமதிச் சீட்டு. இதுபோன்ற ஹேக்கிங் மூலம்தான் வேறு இடத்தில் இருக்கும் ஒருவருடைய கம்ப்யூட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை தான் இருக்கும் இடத்திலிருந்தே பொறியாளர் சரிசெய்வார். இதை தவறாகப் பயன்படுத்தியே தற்போது பல மோசடிகள் நடக்கின்றன. அதனால் நமக்கு தெரியாத நபர்களை நம்பி தேவையற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : #MONEY #CHENNAI #OTP #FRAUD #PAYTM #HACKER