'ஹலோ'... நான் பிரஸ்... என்கிட்ட வச்சுக்காதிங்க... வாங்க தம்பி! உங்களத்தான் தேடிக்கிட்டு இருக்கோம்... போலி பத்திரிகையாளர்களுக்கு காத்திருக்கும் 'ஆப்பு'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்'பத்திரிகையாளர் எனக்கூறி, மிரட்டல் விடுப்பவர்களின் உண்மை தன்மையை ஆராய, சிறப்பு குழு அமைக்கப்படும்' என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிலை திருட்டு வழக்குகளில், பொய்யான தகவலை, முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்.சேகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். பத்திரிகையாளர் என குறிப்பிட்டு, அவர் இம்மனுவை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு விசாரணையில், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அடையாள அட்டை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சந்தேகமடைந்த நீதிபதிகள் இதுகுறித்து மனுதாரர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, பத்திரிகையாளர் எனக்கூறி, குற்றச் செயல்களில் பலர் ஈடுபடுவதாகவும், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களை பிளாக்மெயில் செய்வதாகவும் வரும் புகார்கள் குறித்தும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பத்திரிகையாளர்கள் எனக்கூறி, அரசு அதிகாரிகளையும், தொழில் அதிபர்களையும் மிரட்டி, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என குறிப்பிட்டனர்.
