'டியூஷன் படிக்க வந்த சிறுமி'...'கணவர் செய்த கொடூரம்'...'மறைத்த ஆசிரியை'... சென்னையை அதிரவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 18, 2020 12:11 PM

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை மற்றும் சென்னை மாநகர காவல்துறை பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆசிரியையை நம்பி டியூஷன் படிக்க வந்த மாணவியிடம், அவரது கணவர் சிறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : School Teacher and her husband arrested under Pocso Act

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் . ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வரும் இவருக்கு, விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்ததும், அருகில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் வருகிறார். இவரிடம் வீட்டின் அருகில் வசிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்க வந்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த நரேஷ் சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார். அந்த நேரத்தில் அருகில் யாரும் இல்லாததால் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பதறி போன சிறுமி கதறி அழ தொடங்கியுள்ளார். உடனே தங்கையின் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் சகோதரனிடம்,  நடந்த சம்பவங்களை சிறுமி கூறியுள்ளார். உடனே இதுபற்றி தனது பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளான். தங்களது குழந்தைக்கு நடந்த கொடூரத்தை எண்ணி பதறி போன அவர்கள், உடனடியாக ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதனிடையே புகார் குறித்து அறிந்ததும் நரேஷ், தனது மனைவியுடன் தலைமறைவானார். உடனடியாக இருவரையும் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், கணவன்-மனைவி இருவரும் பூந்தமல்லியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிந்தது. அங்குசென்றபோலீ சார் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நரேஷ் மற்றும் இச்செயலை மறைத்து அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவியான பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைதான கணவன்- மனைவி இருவரையும் நேற்று இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாங்கள் நம்பி தானே எங்களது குழந்தைகளை டியூஷன் படிக்க அனுப்புகிறோம், எனவே இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் ஆத்திரத்துடன் கூறியுள்ளார்கள்.

Tags : #SEXUALABUSE #SCHOOLSTUDENT #CHENNAI #POCSO ACT #SCHOOL TEACHER #HUSBAND