‘தாயுடன் சாலையை கடந்த LKG குழந்தை’.. ‘அசுர வேகத்தில்’ மோதிய கார்.. ECR ரோட்டில் நடந்த கோரவிபத்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 20, 2020 09:59 PM

மாமல்லபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதி தாய், மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai car accident mother and son died on ECR road

மாமல்லபுரம் அருகே உள்ள புது கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திலகவதி (38). இவரது மகன் திருமுருகன் (4). குழந்தை கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) கடக்க முயன்றுள்ளார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, திலகவதி மற்றும் அவரது மகன் திருமுருகன் மீது பலமாக மோதியுள்ளது.

இதனால் இருவரும் சாலையின் ஓரமாக தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags : #ACCIDENT #KILLED #CHENNAI #ECR