darbar USA others

‘திருமணமான’ 4 ஆண்டுகளில்...‘சென்னை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘சோகம்’... ‘3 மாதத்தில்’ குழந்தை... ‘கதறும்’ பெற்றோர்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 14, 2020 06:00 PM

சென்னையில் திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai 4 Years After Marriage Woman Dies Mysteriously

சென்னை பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராமகிருஷ்ணன் (30) - பாரதி (24). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், தற்போது இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதிக்கு உடல்நிலை சரியில்லை என ராமகிருஷ்ணன் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாரதியை அவர் சென்னை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாரதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராமகிருஷ்ணன் மனைவியின் உடலை வீட்டிற்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் மனைவி மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாரதியின் இறப்பு குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர், தங்களுடைய மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாரதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகி 4 ஆண்டுகளுக்குள் பாரதி இறந்திருப்பதால் இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags : #MURDER #CRIME #HUSBAND #WIFE #CHENNAI #MARRIAGE