அடுத்த 24 மணிநேரத்தில்... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 19, 2020 08:36 PM

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert in Tamilnadu for Next 24 hours Read here more

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் வரும் 22,23-ம் தேதிகளில் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் திருவாரூர் மாவட்டம், பாண்டவையாறு, நீடாமங்கலம் தலா 5.செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.

Tags : #RAIN #ALERT #IMD #CHENNAI