darbar USA others

நண்பனிடம் இருந்து தான் கத்துக்கிட்டேன்... லேடீஸ் ஹாஸ்டலில்... இந்த டைம் தான் எனது டார்கெட்... சென்னையில் பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 14, 2020 05:56 PM

சென்னையில் பல்வேறு பெண்கள் விடுதியில் (Ladies Hostel) சர்வ சாதரணமாக நுழைந்து, ஒட்டு மொத்தமாக செல்ஃபோன்களை திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கொடுத்த வாக்கு மூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போய் உள்ளனர்.

Chennai man Confession on Steals Mobiles in ladies Hostel

கடந்த சில நாட்களாக அரும்பாக்கம், திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், கோட்டூர்புரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் ஒரே பாணியில் பெண்கள் விடுதியில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. பெண்கள் விடுதிகளுக்கு உள்ளே ஹெல்மெட் மாட்டிய நிலையில் செல்லும் இளைஞர் ஒருவர் ‘வைஃபை’ இணைப்பில் பிரச்சினை இருப்பதாக கூறி பெண்களை ஏமாற்றி சில செல்ஃபோன்களை ஒரே இடத்தில் சார்ஜர் போடக் கூறி, அவர்கள் அசந்த நேரம் செல்ஃபோன்களை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

தொடர்ந்து வந்த புகாரின் பேரில், தண்டையார் பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த பாலாஜி (31) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்தபோது தான் நண்பன் ஒருவன் மூலம் செல்ஃபோன்கள், லேப்டாப்களைத் திருடுவதைக் கற்றுக் கொண்டேன். அந்த நண்பன் இறந்துவிட்டதால், அதன் பிறகு நானே தனியாக செல்ஃபோன்கள், லேப்டாப்களைத் திருடி விற்று வந்தேன். ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் லேப்டாப்கள், செல்ஃபோன்களைத் திருடி, குறைந்த விலைக்கு விற்பதால், என்னிடம் திருட்டுப் பொருள்களை வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவும். 

நடந்து செல்பவர்களிடம் செல்ஃபோன் பறிப்பது, பூட்டை உடைத்து திருடுவதில் எல்லாம் எனக்கு விருப்பம் கிடையாது. சென்னையில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல்களில் தங்கியிருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் டிப்டாப்பாக சென்று, என்னுடைய உறவினரை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டும் என்று கூறி, ஒரு பகுதியில் உள்ள ஹாஸ்டல்களை பிளாட்பாரங்களில் பூ, பழம் விற்கும் பெண்களிடம் கேட்டு தெரிந்துகொள்வேன். பின்னர் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் அலுவலகத்துக்குச் செல்ல பெண்கள் தயாராகிக் கொண்டிருக்கும் பரபரப்பான நேரத்தில், ஹாஸ்டலுக்குள் நுழைவேன்.

செல்ஃபோன் நெட்வொர்க் கம்பெனியிலிருந்து வருவதைப்போல நடித்து, செல்ஃபோன் டவர் வெடித்துவிட்டது மேடம், அதனால் சிக்னல் கிடைக்கிறதா என்பதை செக் செய்ய கம்பெனியிலிருந்து வந்துள்ளேன் என்று கூறுவேன். எல்லாரையும் ஒரே இடத்தில் செல்ஃபோனை வைக்க சொல்லி, செல்ஃபோன்களில் சிக்னல் வருகிறதா என்பதை ஆய்வு செய்வதைப் போல சில நிமிடங்கள் செக் செய்வேன். செல்ஃபோன் டவர், வைஃபை பூஸ்டர்கள் வெடித்துள்ளதால் ரேடியேசன் அதிகமாக இருக்கிறது. அதனால் உங்களுக்கு ஆபத்து என்று அங்குள்ளவர்களிடம் கூறுவேன். என் பேச்சை உண்மையென நம்பி அவர்களும் அங்கிருந்து சென்றுவிடுவார்கள்.

அந்தச் சமயத்தில் செல்ஃபோன்களை எடுத்துக்கொண்டு தப்பிவிடுவேன். சிசிடிவி கேமராக்கள் உள்ளதால், போலியான நம்பர் பிளேட்கள் மூலம் திருட்டு பைக்குகளைப் பயன்படுத்தி வந்தேன். ஹெல்மெட் அணிந்தே ஹாஸ்டலுக்குள் நுழைவதால், யாருக்கும் எனது அடையாளம் தெரியாது’ என்று கூறி அதிரவைத்துள்ளார். செல்ஃபோன்களைத் திருட ஒரே பாதையை பயன்படுத்தியதால் காவல்துறையிடம் சிக்கிய பாலாஜி, தண்டையார் பேட்டையில் குடியிருந்தாலும் அவர் அங்கு இரவில் தங்குவதில்லை. பணமிருந்தால் நட்சத்திர ஹோட்டலில் தங்குவார். பணமில்லை என்றால் சென்னை கடற்கரை அல்லது உறவினர் வீடுகளில் தங்கிக்கொள்வதை பாலாஜி வாடிக்கையாக வைத்துள்ளார் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Tags : #CHENNAI #MOBILE #PHONES #CCTV #YOUTH