'விடாமல் தட்டிய நண்பர்கள்'... 'திறக்காத எம்.பி.ஏ மாணவன்'... சென்னையின் பிரபல கல்லூரியில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 18, 2020 03:42 PM

சென்னையின் பிரபல லயோலா கல்லூரியின் விடுதியில், மாணவன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MBA student committed suicide by hanging inside loyola College Hostel

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், சீதாம்மதுரா பகுதியைச் சேர்ந்தவர் கமலகர் ரெட்டி. இவர் ஆந்திர காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் வம்சி பவன். இவர் சென்னை லயோலா கல்லூரியின் வளாகத்திலுள்ள லிபா ஜென்ட்ஸ் ஹாஸ்டலில்(Liba gents hostel) தங்கி லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு வம்சி பவனின் நண்பர்கள், அவரை காண அவரது அறைக்கு சென்றுள்ளார்கள். ஆனால் ஆவர் கதவை திறக்கவில்லை. இதனால் வெகு நேரம் கதவை தட்டியுள்ளார்கள். இருந்தபோதும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி, வம்சியின் நண்பர்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

வம்சி பவன் மின்விசிறியில் நைலான் கயிறு கொண்டு தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். இதையடுத்து கீழ்ப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வம்சி பவனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். இதனால் வம்சி பவனின் நண்பர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் வம்சி பவன் மரணத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல கல்லுரியில் மாணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #SUICIDEATTEMPT #COLLEGESTUDENT #CHENNAI #LIBA #LOYOLA COLLEGE #MBA STUDENT