'போனை எடுக்காத தங்கை'... ‘சென்னையில் கணவரால் நேர்ந்த பயங்கரம்’... 'அதிர்ந்து போன அக்கா'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 20, 2020 04:52 PM

சென்னை கிண்டியில், வாஷிங் மெஷின் ட்யூப்பால் மனைவியின் கழுத்தை நெறித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai man arrested for wife\'s murder due to family issue

கிண்டி மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் பிரசாத் (35). இவரது மனைவி உஷா (30). இவர்களுக்கு 5 வயதில் பூஜா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இருவரும் அதேப் பகுதியில் தோசை மாவு விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திராவில் வசிக்கும் உஷாவின் சகோதரி நளினி, செல்ஃபோனில் தனத தங்கை உஷாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனை எடுத்த உஷாவின் கணவர் பிரசாத், உஷா தூங்குவதாக கூறியுள்ளார். இதனால் அப்போது போனை வைத்த நளினி நேற்று மீண்டும் போன் செய்துள்ளார்.

அப்போது, உஷாவின் செல்ஃபோனை எடுத்த ஒருவர், உஷாவிற்கு உடம்பு சரியில்லாதால் மடுவின்கரையில்  இருப்பதாகவும். அவரது கணவர் குழந்தையுடன் சித்தூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு  சென்றுவிட்டதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த நளினி, கிண்டியில் உள்ள தனக்கு தெரிந்த நண்பரிடம் விவரத்தை கூறி தங்கையின் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி அவர்கள் உஷா வீட்டுக்கு சென்றுப் பார்த்தனர். அங்கு உஷா, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை.

இதுகுறித்து நளினிக்கு தகவல் தெரிவிக்க அவர் அதிர்ந்துப் போனார். பொங்கல் விடுமுறையில் தங்களது வீட்டுக்கு சென்று வந்த நிலையில், சகோதரி உயிரிழந்தது குறித்து உஷாவின் சகோதரர் கிண்டி போலீசில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உஷாவின் சடலத்தை கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவர் பிரசாத்தை தேடிவந்தனர். இந்நிலையில், பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களே போலீசாருக்கு போன் மூலம் தலைமறைவான பிரசாத் சென்னை வருவதாக தகவல் தெரிவித்தனர். பின்னர் கோயம்பேடு அருகே பிரசாத்தை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், ‘நான் சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு பைக்கில்தான் செல்வேன். அதை என் மனைவி உஷா கண்டிப்பார். மேலும் கணக்குப்பார்த்து நான் செலவழிக்க மாட்டேன். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். பொங்கல் செலவுக்காக டூவீலரை விற்றேன். அதை உஷா கண்டித்தார். அதனால்தான் எனக்கும் அவளுக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது. மேலும், இட்லி மாவு விற்பனையில் தரமான பொருள்களைப் பயன்படுத்தும்படி மனைவியிடம் கூறினேன். ஆனால், அவள் என் பேச்சைக் கேட்காமல் ரேஷன் அரிசி, பருப்புகளைப் பயன்படுத்தினார்.

அதனாலும் எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் கடந்த சனிக்கழிமை அன்று அவளை அடித்தேன். வாஷிங்மெஷின் டியூப்பால் கழுத்தை நெறித்தேன். அவள் மயங்கியதும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆந்திராவுக்குச் சென்றுவிட்டேன்’ என்று கூறியுள்ளார். அங்கு குழந்தையை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்தே பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களே போலீசாருக்கு தகவல் தெரிவித்தது’ தெரியவந்தது. மேலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பிரசாத் ஆடம்பரமாக செலவு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Tags : #MURDER #CHENNAI #GUINDY