‘ஷேர் ஆட்டோவில் போன இளம்பெண்’.. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த 2 வாலிபர்கள் செய்த காரியம்..! சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 18, 2020 06:04 PM

சென்னையில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண்ணின் தலைமுடியை இளைஞர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai man cuts off woman’s hair in moving share auto

சென்னை நெற்குன்றத்தில் இருந்து அமைந்தகரையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றிற்கு ஷேர் ஆட்டோவில் 23 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னால் உள்ள சீட்டில் இரண்டு வாலிபர்கள் அமர்ந்திருந்துள்ளனர். ஆட்டோ என்.எஸ்.கே நகர் அருகே வந்த போது தனது தலைமுடியை யாரோ வெட்டுவதுபோல் இளம்பெண் உணர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக ஆட்டோவை டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது இளம்பெண்ணின் பின்னால் சந்தேகிக்கும்படியாக அமர்ந்திருந்த இரு வாலிபர்களை சோதனை செய்துள்ளனர். அதில் ஒரு வாலிபரின் பேண்ட் பையில் இளம்பெண்ணின் வெட்டப்பட்ட முடி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

உடனே தப்பி ஓட முயற்சித்த வாலிபர்களை சக பயணிகள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க விரும்பவில்லை என தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் தலைமுடியை வெட்டிய இரு வாலிபர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் தலைமுடியை இளைஞர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #WOMAN #AUTO