‘வீடு புகுந்து’ தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் அராஜகம்..! சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 21, 2020 10:47 PM

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்தியைக் காட்டி மர்ம நபர்கள் கொள்ளை அடித்து செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jewellery, cellphone robbery near Peerkankaranai in Chennai

சென்னை பீர்க்கங்கரணை பகுதியில் வசிப்பவர் சுசித்ரா. இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், வீட்டுக்குள் புகுந்து சுசித்ராவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த தாலி சங்கிலி, 2 செல்போன், 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இதேபோல் மாலை மாலை 6 மணியளவில் பழைய பெருங்களத்தூர் பகுதியில் வசிக்கும் உஷா என்பரிடம் கத்திமுனையில் தங்க நகை, செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதனை அடுத்து முடிச்சூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியரை தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் போலீஸார் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : #ROBBERY #POLICE #CHENNAI